திருச்சி:திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த அழிஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்த மருதை - லட்சுமி தம்பதியின் மகன் சூர்யா (16).
11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று(ஜன.24) காலை சூர்யா வீட்டின் அருகே உள்ள கோயில் முன்பு தீபாவளிக்கு வாங்கி மீதம் இருந்த பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததையடுத்து அதை தனது வலது கையில் எடுத்துள்ளார்.
எதிர்பாராத விதமாக அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவனின் மூன்று விரல்கள் படுகாயமடைந்தன.