தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி வெங்காய மண்டியில் அலுவலர்கள் திடீர் சோதனை - எகிப்திலிருந்து 30 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி

திருச்சி: வெங்காயம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் புலனாய்வு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

onion-warehouse
onion-warehouse

By

Published : Dec 10, 2019, 2:57 PM IST

நாடு முழுவதும் தங்கம் - வெள்ளி விலையைப் போன்று வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விலை ஏற்றம் அடைந்த பின் சந்தைப் படுத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் எகிப்திலிருந்து 30 டன் பெரிய வெங்காயம் மும்பை வழியாக நேற்று திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் இவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெங்காய மண்டியில் அலுவலர்கள் திடீர் சோதனை

இந்நிலையில், இந்த வெங்காய மண்டியில் வெங்காய மூட்டைகள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது வெங்காய முட்டைகள் எதுவும் பதுக்கப்படவில்லை என்பதை அலுவலர்கள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து வெங்காய விற்பனை விலை குறித்து அலுவலர்கள் வியாபாரிகளிடம் விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து குடிமைப் பொருள் புலனாய்வு அலுவலர் கூறுகையில், இதுவரை விற்பனை செய்த விலையை விட தற்போது வெங்காய விலை குறைந்துள்ளது. வெங்காய முட்டைகள் பதுக்கி விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க...

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்... 10 டன் வெங்காயத்துடன் விபத்தில் சிக்கிய லாரி!

ABOUT THE AUTHOR

...view details