மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி 56 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துவருகிறது. பழைய ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் அதேநேரத்தில் புதிய ரிக் இயந்திரத்திரத்தை பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
மீட்புப் பணிகளை பார்வையிட வந்த துணை முதலமைச்சர்! - o panneerselvam in sujith rescue spot
மீட்புப் பணிகளை பார்வையிடுவதற்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
Sujith
இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்துப் பார்வையிடத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். மீட்புப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் உடனிருந்தார்.