தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி விவகாரம் குறித்து நான் கருத்துச்சொல்வது சரியாக இருக்காது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

'ஆன்லைன் ரம்மி விவகாரம் தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் உள்ள பிரச்சனை ஆகும். அதில் நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது' என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன்
ஆன்லைன் ரம்மி விவகாரம் குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது - தமிழிசை பேட்டி

By

Published : Mar 26, 2023, 3:28 PM IST

ஆன்லைன் ரம்மி விவகாரம் குறித்து நான் கருத்துச்சொல்வது சரியாக இருக்காது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

திருச்சி:தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்து பல நல்லத் திட்டங்களை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள். மரியாதைக்குரிய முதலமைச்சர், அமைச்சரவையினை சார்ந்த சகோதரர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் சிலிண்டர் மானியம் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசும் 200 ரூபாய் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உயர்த்தியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான அறிவிப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழகம் அறிவித்து இன்னும் கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன் புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் காப்பீடுத்திட்டம் ஒன்று கொண்டு வந்துள்ளார்கள். மேலும் பல நலத்திட்டங்களை புதுச்சேரி அரசு நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. பாரத பிரதமர் மோடி சொல்வது போல் பெஸ்ட் புதுச்சேரியாக கொண்டு வருவதற்கு எல்லாம் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது' என்று கூறினார்.

இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, 'அது சட்டரீதியாக தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் உள்ள பிரச்னை. எனவே, அதில் நான் கருத்துச் சொல்வதில் சரியாக இருக்காது' என்று கூறினார்.

பின், கச்சத்தீவில் வழிபாடு செய்யும் இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,"வழிபாட்டுத் தலங்களை தவறாக கொண்டு போகிறார்கள் என்று சொல்ல முடியாது. வழிபாட்டுத் தலங்களை பிரச்சனைக்குள் கொண்டு வரக்கூடாது என்பது தான் எனது எண்ணம். இதில் நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது. நான் ஒரு கருத்து சொல்லி அது வேறு மாதிரி சென்றால் நன்றாக இருக்காது. இது இரு நாட்டு பிரச்னை. எம்மதமும் சம்மதம் என்ற சூழ்நிலை எல்லா இடத்திலும் இருக்க வேண்டும் என்பது நல்ல விஷயம்' எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, 'அதுக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது... அரசியல் ரீதியாக என்னால் பேச முடியாது, புதுச்சேரி மாநில அரசாங்கம் ரீதியாக மட்டுமே என்னால் கருத்துக்கூற முடியும். நான் சார்ந்து இருந்த கட்சியாக இருந்தாலும் பதில்கள் கூற முடியாது' எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டம் - டெல்லியில் தடையை மீறி போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details