தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவ.24 ஆம் தேதிமுதல் காய்கறி விற்பனை கிடையாது: வியாபாரிகள் அறிவிப்பு - சங்கத் தலைவர் கோவிந்தராஜுலு

திருச்சி: காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வருகின்ற 24ஆம் தேதி மாலை முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் காய்கறி விற்பனை செய்யப் போவதில்லை என்று காந்தி மார்க்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது.

gandhi market
gandhi market

By

Published : Nov 21, 2020, 6:01 PM IST

திருச்சி காந்தி மார்க்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று (நவ.21) நடைபெற்றது. இதில் 27 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் சங்கத் தலைவர் கோவிந்தராஜுலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வருகின்ற 26ஆம் தேதி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவம்பர் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்ய மாட்டோம்.

நவம்பர் 26ஆம் தேதி எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால் 27ஆம் தேதி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்வோம். பாதகமாகத் தீர்ப்பு வந்தால் 27ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். குடும்பத்துடன் காந்தி மார்க்கெட் முன்பு உண்ணாவிரம் இருப்போம். அதேபோன்று ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம்.

நவ.24 ஆம் தேதி முதல் காய்கறி விற்பனை கிடையாது

அதற்கும் தீர்வு கிடைக்கவில்லெயன்றால் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். கரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் காய்கறி மார்க்கெட்டுகள் திறந்து விட்ட நிலையில் காந்தி மார்கெட்டை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி மார்க்கெட் திறக்கும் வரை காய்கறிகள் விற்பனை செய்ய மாட்டோம்"என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்தவர் பிடிபட்டார்!

ABOUT THE AUTHOR

...view details