திருச்சி:1964 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்து துவாக்குடியில் என்ஐடி தொடங்கப்பட்டது. இந்நிலையில் என்ஐடி-யின் 59ஆவது ஆண்டு விழா நேற்று (ஏப். 27) என்ஐடி வளாகத்தில் கல்லூரி இயக்குநர் அகிலா தலைமையில் நடைபெற்றது. இவ்விழா கல்வியாண்டில் கல்விசார் திறமைகளிலும் ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள், பேராசிரியர்களின் விடாமுயற்சி, வெற்றிகளை அங்கீகரித்து கவுரவிப்பதற்காக கொண்டாடப்பட்டது.
இதில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையின் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) இயக்குநர் பேராசிரியர் முனைவர் வீ.காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.