திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடுகபட்டி பகுதியில் தனிநபருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் மயில்கள் இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனச்சரகர் மகேஷ்வரன் தலைமையிலான மணப்பாறை வனத் துறையினர், இறந்துகிடந்த ஒரு ஆண் மயில், எட்டு பெண் மயில்களின் உடல்களைக் கைப்பற்றினர்.