திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதைப்போல, சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவிட் 19 வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்வகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளை கரோனா கண்டறிதல் சோதனை செய்தபோது, 23 பேருக்கு கோவிட்-19 அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த 23 பேரும் கள்ளிக்குடி மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.
இந்த வார்டிற்குள் யாரும் செல்லாத வகையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவசர ஊர்தி, மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இந்த வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க:யூ-ட்யூப் பார்த்து இளம்பெண்ணுக்குப் பிரசவம்... இறந்து பிறந்த குழந்தை: காதலன் கைது