திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர்கள் விமலன் - ஸ்ரீநிதி தம்பதி. இந்த நிலையில் திருவெறும்பூர் பகவதிபுரத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீநிதியை பிரசவத்துக்காக அனுமதித்துள்ளனர். அப்போது பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் ரஷ்யா தேவி பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பணியில் இருந்த செவிலியர்களான செண்பகவல்லி மற்றும் லதா ஆகியோர் ஸ்ரீநிதிக்கு பிரசவம் பார்த்ததாகவும், பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டதாக மாலை 6.30 மணிக்கு, சுமார் 3 மணி நேரம் கழித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.