தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய கே.என். நேரு - தமிழ் செய்திகள்

திருச்சி: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை திமுக திருச்சி மாவட்ட முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வழங்கினார்.

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய கே.என். நேரு
அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய கே.என். நேரு

By

Published : May 11, 2020, 3:06 PM IST

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குழுமணி ,கோப்பு, முள்ளிக்கரும்பு, போசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதனை ஒன்றிய குழுத் தலைவர் துரைராஜ் ஏற்பாட்டில் திமுக திருச்சி மாவட்ட முதன்மைச் செயலாளர் கே.என். நேரு சுமார் மூவாயிரம் குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தொகுப்பினை வழங்கினார்.

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய கே.என். நேரு

இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முள்ளிக் கரும்பு ஊராட்சி மன்ற தலைவர் கீதா துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மனைவியைப் பார்க்கச் சென்றவருக்கு கரோனா தொற்று உறுதி!

ABOUT THE AUTHOR

...view details