இந்தியா முழுவதும் வெங்காய உற்பத்தி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைச் சரிசெய்யும் விதமாக, வெளி நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதனடிப்படையில், முதல்கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் மும்பை வழியாக நேற்று திருச்சி வெங்காய மண்டியை வந்தடைந்தது. அது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெங்காயத்தின் நிறம் மாறி இருந்ததால் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.