தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராப்பத்து 9ஆம் நாள்: ஸ்ரீரங்கத்தில் முத்து சாய் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் - Namperumal who arose in Srirangam in a pearl necklace

திருச்சி: ராப்பத்து ஒன்பதாம் திருநாளான இன்று (ஜன. 02) ஸ்ரீரங்கத்தில் முத்து சாய் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

முத்து சாய் கொண்டை அலங்காரம்
முத்து சாய் கொண்டை அலங்காரம்

By

Published : Jan 2, 2021, 9:03 PM IST

ஸ்ரீரங்கம் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் பதின்மர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகச் சிறப்புடன் விளங்குகிறது.

இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பகல்பத்து நிகழ்ச்சியில் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முத்து சாய் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15்ஆம் தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல்நாளான திருமொழி திருவிழா தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் 10ஆவது நாளான 24ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்றைய சிறப்பு அலங்காரம் - ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

இன்றைய சிறப்பு அலங்காரம்

ராப்பத்து ஒன்பதாம் திருநாளான இன்று நம்பெருமாள் முத்துசாய் கொண்டையில் எழுந்தருளி நாழிகேட்டான் வாயில் வழியாக மணல் வெளிவந்து, ஆயிரம்கால் மண்டபம் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

சுவாமி பாதம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து நிகழ்ச்சியின் 9ஆம் நாளான இன்று காலை 6 மணி முதல் 9 மணிவரை மூலவர் ரங்கநாதப் பெருமாள் முத்தங்கி சேவை தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் திறக்கப்பட்டது. அதேபோல் ஒரு மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. 1 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் 2 மணிமுதல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

ராப்பத்து 9ஆம் நாள்-நம்பெருமான்
பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் 9 மணிக்கு மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரங்கநாதரின் முத்தங்கி சேவையையும், உற்சவர் நம்பெருமாள் சேவையையும் தரிசித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details