தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வானியல், அறிவியல் கழகம் சார்பில் நட்சத்திர திருவிழா! - Trichy news in tamil

தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம் சார்பில் வரும் ஜனவரி 7 முதல் 9-ம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு நட்சத்திர திருவிழா என்ற வானியல் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம் சார்பில் நட்சத்திர திருவிழா என்ற வானியல் நிகழ்ச்சி
தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம் சார்பில் நட்சத்திர திருவிழா என்ற வானியல் நிகழ்ச்சி

By

Published : Dec 31, 2022, 5:56 PM IST

தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம் சார்பில் நட்சத்திர திருவிழா என்ற வானியல் நிகழ்ச்சி

திருச்சி: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவைகள் இணைந்து நட்சத்திர திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நட்சத்திர திருவிழாவானது நடைபெற உள்ளது. அதில் சென்னை பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும், கோவையில் 18க்கும் மேற்பட்ட இடங்களிலும், திருச்சியில் 10 இடங்களிலும் நடைபெற உள்ளது. அதில் திருச்சியில் தேசிய கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி, மணிகண்டம் கிரியா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, அண்ணா அறிவியல் கோளரங்கம், உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.

இந்த நட்சத்திர திருவிழா குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகரன், ”கி.பி.1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாகக் கண்டறிந்து அதனைச் சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார்.

இந்த கண்டுபிடிப்பு தான் உலகை புரட்டிப் போட்ட நாள் என்பதைக் கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நட்சத்திர திருவிழா கொண்டாட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அந்த மூன்று நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும், இதில் பங்கு பெறக்கூடிய அனைவரும் தொலைநோக்கிகள் மூலம் வியாழன் கோளையும், நிலா, நட்சத்திரங்கள் மற்ற கோள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாகக் கண்டு மகிழலாம்” என்றும் தெரிவித்தார்.

மேலும் ”இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்கிகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடிய வானியல் வல்லுநர்கள் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடி வானியல் தொடர்பான விளக்கங்களைக் கேட்டு அறியலாம்” என்று கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகத்தின் தலைவர் ஜெயமுருகன், மாநில ஆலோசகர் சாந்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலின் பிரீத்தா ஜெப செல்வி, ஆலோசகர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: New year celebration: தமிழ்நாடு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details