கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளில் முன்னணி வீரர்களாக தூய்மைப் பணியாளர்கள் விளங்கி வருகின்றனர். அந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மணப்பாறை நகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மளிகைப் பொருள்கள், காய்கறிகள், வைட்டமின் டி மாத்திரைகள் உள்ளிட்டவைகள் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.