திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அண்மையில்தான் கட்டிய புதிதாக வீடு ஒன்றுக்கு வீட்டிற்கு வரிக் கட்டும் வழிமுறைக்காக திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றும் முருகன் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது செந்தில்குமாரிடம் முருகன் வரி விதிப்பதற்காக ரூ. 4,000 ஆயிரத்தை கையூட்டாக தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அலுவலக உதவியாளரான திலீப் கென்னடி என்பவரும் உறுதுணையாக இருந்துள்ளார். கையூட்டு கொடுக்க விருப்பம் இல்லாத செந்தில்குமார் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரையின்பேரில் இன்று இரவு ரசாயனம் தடவிய 4,000 ரூபாய் பணத்தை அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கியபோது கலெக்டர் முருகன், அலுவலக உதவியாளர் திலீப் கென்னடி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.