கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. மேலும் தமிழ்நாடு அரசு, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தனியார் அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை வழங்குமாறு கேட்டுகொண்டது. அதன்படி பலர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
எம்.டி.எஸ். குருகுலம் சார்பில் குடிசை வாசிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் - covid-19 lockdown
திருச்சி: எம்.டி.எஸ். குருகுலம் சார்பில் 100 குடிசை வாசிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை வாட்டாட்சியர் வழங்கினார்.
![எம்.டி.எஸ். குருகுலம் சார்பில் குடிசை வாசிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் mts-gurukulam-trichy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6909269-thumbnail-3x2-l.jpg)
அதன்படி, திருச்சி சுந்தர் நகர், ரெங்கா நகர், பாறைப் பகுதிகளைச் சேர்ந்த 100 குடிசைவாசிகள் குடும்பத்திற்கு எம்டிஎஸ் குருகுலம் பள்ளி நிர்வாகம் சார்பில் 15 நாள்களுக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன். அந்த நிகழ்வில் திருச்சி வாட்டாட்சியர் சத்தியபாமா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் எம்டிஎஸ் அறக்கட்டளை நிறுவனர் எழில், குருகுலம் பள்ளியின் தாளாளர் பத்மினி, அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:திமுக சார்பில் வழங்கப்பட்ட கரோனா நிவாரணப் பொருள்கள்