திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் நடந்த 'மிஸ்டர் ராக் 90' என்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஈரோடு உள்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 55 கிலோ முதல் 80-க்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட 130 வீரர்கள் கலந்துகொண்டனர்.
'மிஸ்டர் ராக் 90' - கட்டழகை காட்டிய 130 வீரர்கள் - body builder competition
திருச்சி : கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் 'மிஸ்டர் ராக் 90' என்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 130 வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் கட்டழகை வெளிப்படுத்தினார்கள்.
இதில் ஒவ்வொரு எடை பிரிவுக்கும் தனித்தனியே போட்டிகளும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களை பெற்றவர்களுக்கு தனித்தனியே பரிசுகளும் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட அமெச்சூர் சங்க துணைத் தலைவர் சுகுமார், பொருளாளர் வேதமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்த இந்தப் போட்டியில் மூத்த அமெச்சூர் ஆணழகன் வீரர்கள், மிஸ்டர் வேர்ல்ட் பதக்கம் வென்ற அரசு, மிஸ்டர் இந்தியா பதக்கம் வென்ற சுதன், மிஸ்டர் ஏசியா பதக்கம் வென்ற கலைச்செல்வன், மிஸ்டர் சவுத் இந்தியா பதக்கம் வென்ற சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.