திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பின்னலாடைத் தொழில் துறையினருடனான ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "ஏற்கெனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பின்னலாடைத் தொழில் துறையினர், கடந்த மூன்று மாத ஊரடங்கு காலத்தில் மிகவும் நலிவடைந்துள்ளனர்.