தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறை அருகே வாகன விபத்து - ஒருவர் உயிரிழப்பு , 3 பேர் படுகாயம் - ரமலான் பண்டிகை

திருச்சி: மணப்பாறை அருகே மினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

motorcyclist-crashes-into-mini-van-one-killed-three-injured
motorcyclist-crashes-into-mini-van-one-killed-three-injured

By

Published : May 25, 2020, 8:15 PM IST

Updated : May 25, 2020, 8:21 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தநத்தம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தர் புரோஸ்கான். இவர் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் புத்தநத்தம் சென்றார்.

பன்னாங்கொம்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, மினி லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த புரோஸ்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மூவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்தவரின் உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண்ணிடம் கவரிங் செயினை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த இளைஞர்கள்!

Last Updated : May 25, 2020, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details