தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த தாய் கைது! - எலி பேஸ்ட் கொடுத்து கொலை

திருச்சியில் தனது 7 வயது மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்ததாக தாயைக் கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்.

7வயது மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்த தாய்
7வயது மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்த தாய்

By

Published : Jun 27, 2021, 2:36 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவர் தனது கணவரை பிரிந்து தனது ஏழு வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த கிருத்திகா, தனது மகளுக்கு எலிக்குப் பயன்படுத்தக்கூடிய பேஸ்ட்டை கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிருத்திகா குணமடைந்த நிலையில், அவரது மகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மனப்பாறை காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிருத்திகா சிறுமிக்கு எலி பேஸ்ட் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கிருத்திகாவை கைது செய்த மகளிர் காவல் துறையினர், நீதிபதிகள் உத்தரவின் பேரில் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பணத்துக்காக 14 வயது சிறுமியை தந்தையே விற்ற அவலம்!

ABOUT THE AUTHOR

...view details