திருச்சி: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டக் கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று வருபவர், திருச்சி மாவட்டம், ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன் - பிரகதா தம்பதியரின் மகள் சுகித்தா (12).
சிறுவயதிலேயே சாதனை
கோவா சர்வதேச போட்டியில் முதல் பரிசாக தங்கம் வென்றதில் தொடங்கி, சிங்கப்பூர் சர்வதேச போட்டியில் முதல் பரிசு தங்கம், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன் பட்டம், டெல்லியில் நடந்த தேசிய போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளியென 25-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை குவித்துள்ளார். 12 வயதிலேயே சிலம்பக்கலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வகை பாடங்களை கற்றுத் தேர்ந்துள்ளார்.
இப்படி பல்வேறு சாதனை புரிந்த சுகித்தாவின் இல்லத்திற்கு இன்று திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.