கரோனா பரவல் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்லவும், சானிடைசர் மூலம் அடிக்கடி கை கழுவவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
அந்த வகையில், பொதுமக்களுக்கு அரசு சார்பில் முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநகராட்சி ஆணையரை இன்று சந்தித்தார்.