திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த வளாகத்தில் திருமண மண்டபமும் செயல்பட்டு வருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் இந்த கலைஞர் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
அண்ணா, கருணாநிதியின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்! - ஸ்டாலின்
திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
dmk
தற்போது இந்த கலைஞர் அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு, அழகிரி ஸ்டாலின் சபரீசன், திருநாவுக்கரசர் உள்பட பலர் கொண்டனர்.
முன்னதாக லால்குடியில், முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை ஸ்டாலின் திறந்துவத்தார்.
Last Updated : Jun 10, 2019, 11:05 PM IST