திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜய் (23). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் தனிப்படை காவல் துறையினர் விஜய்யை தேடி வந்தனர்.
இந்ந நிலையில் பாலக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் தனிப்படையைச் சேர்ந்த முதல் நிலை காவலர் வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சங்கிலியாண்டபுரத்தில் இருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாத இருச்சக்கர வாகனத்தில் விஜய் வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் இரு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். விஜய் வண்டியில் வருவதை பார்த்த காவலர் வேல்முருகன் அவருடைய வாகனத்திற்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்தி மறியல் செய்ய முயற்சி செய்தார். அப்போது விஜய்யின் வண்டியில் இருந்த நண்பர்களில் ஒருவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு வேல்முருகன் தலையில் பலமாக அடித்தார்.