மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித் தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருக்கும்போது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
இந்தத் தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து பார்வையிட அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.