தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆளா விடுங்க... 7ஆம் தேதி வரை என்னை காப்பாற்றுங்க' - செய்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்த அமைச்சர் - minister vellamandi natarajan

திருச்சி: அதிமுக உள்விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் தொடர்ச்சியாக கேட்ட கேள்விக்கு, 7ஆம் தேதி வரை என்னை காப்பாற்றுங்கள் என செய்தியாளர்களிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vellamandi natarajan comedy in press meet
'7ஆம் தேதிவரை என்னை காப்பாற்றுங்கள்'- செய்தியாளர்களிடம் வேண்டுகொள் விடுத்த அமைச்சர்

By

Published : Oct 3, 2020, 5:53 PM IST

இஸ்லாமிய மகளிர் சங்க பயனாளிகளின் மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கும் விழா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கீழபுலிவார்டு சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிதியுதவி அளித்தனர்.

செய்தியாளர்களுக்கு வேண்டுகொள் விடுத்த அமைச்சர்

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அவர் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டு மேடையிலிருந்தவாறே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அக்டோபர் 7ஆம் தேதிவரை பொறுத்திருங்கள் அதன்பின்பு உங்களைச் சந்திக்கிறேன் என்றார்.

அக்டோபர் 6ஆம் தேதி சென்னை செல்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அனைத்து அமைச்சர்களும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் சென்னையில் இருக்க வேண்டும் என ஏற்கனவே முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். அதனால் அந்த மூன்று தினங்களும் சென்னையில் தான் இருப்போம் என்றார்.

தொடர்ச்சியாக செய்தியாளர்கள் அதிமுக விவாகரங்கள் குறித்து கேள்வி கேட்க, என்னை 7ஆம் தேதிவரை காப்பாற்றுங்கள் என செய்தியாளர்களுக்கு வேண்டுகொள் விடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், விழாவில் சிரிப்பொலி எழுந்தது.

இதையும் படிங்க: 'முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார்'

ABOUT THE AUTHOR

...view details