தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - tamil latest news

திருச்சி: ஏழைகளுக்கு 25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

By

Published : May 8, 2020, 12:14 AM IST

கரோனா வைரஸ் தொற்று தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்த வகையில் நேற்று (மே 7) திருச்சி மாநகராட்சி 18ஆவது வார்டு மக்களுக்கு 25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும் பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியினரும், அரசு அலுவலர்களும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இத்தாலியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பு?

ABOUT THE AUTHOR

...view details