சென்னை, திருச்சி ரோட்டரி சங்கங்களின் சார்பில் திருச்சி தாலுக்கா அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 10.35 லட்சம் மதிப்பில் கரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், "நமது உணவு, பழக்க வழக்கங்கள், கலாசாரம் போன்றவை நம்மை இந்த கொடிய நோயிலிருந்து காப்பாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் இதற்காக சிறப்பாக செயல்பட்டன. தமிழ்நாடு அரசிடம் கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதும் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுத்தது.