திருச்சி மாவட்டத்தில் 31 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்பட்டுவருகிறது. இதில் இரண்டு வாகனங்கள் அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும், மேலும் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் குழந்தைகளுக்காகவும் இயக்கப்பட்டுவருகின்றன.
அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் அடங்கிய 3 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிவைப்பு - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிவைப்பு
திருச்சி: அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் அடங்கிய மூன்று ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.
![அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் அடங்கிய 3 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிவைப்பு ambulance](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8917144-534-8917144-1600927804881.jpg)
ambulance
இது தவிர இன்று அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் அடங்கிய மூன்று ஆம்புலன்ஸ் சேவைகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தத் தொடக்க விழாவில் அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, ஆவின் தலைவர் கார்த்திகேயன், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், துவாக்குடி, லால்குடி ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளிலிருந்து இந்த ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படவுள்ளன.