கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள் என யாரும் கரோனா தாக்குதலுக்கு தப்ப முடியவில்லை. இந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.