தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் வளர்மதி

திருச்சி : வறுமையில் வாடும் 2,500 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தூய்மைப் பணியாளர்க்ளுக்கும் அமைச்சர் வளர்மதி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

By

Published : May 24, 2020, 4:02 PM IST

Published : May 24, 2020, 4:02 PM IST

திருச்சியில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் வளர்மதி
திருச்சியில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் வளர்மதி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாந்தம், கே. பெரியப்பட்டி ஊராட்சிகளில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் பொதுமக்களுக்கு நிவாரணத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி பங்கேற்று ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும், அப்பகுதிகளைச் சேர்ந்த 2,500 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, காய்கறிகள், பழங்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி, அதிமுக மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோரும், அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : பின்னடைவை சந்திக்கும் அச்சு தொழில் - மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் கிடைப்பதில் சிக்கல்..!

ABOUT THE AUTHOR

...view details