திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் உப கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அலுவலர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இந்த கோயில் திருப்பணிகளை தொல்லியத்துறை ஒப்புதலுடன் நடத்திடவும், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகளையும் விரைந்து முடிக்கவும் கோயில் வளாகத்தில் ரூபாய் 46 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய அன்னதான கூடத்தினை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.