தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் தேவையில்லை - அமைச்சர் கே.என்.நேரு! - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் தேவையில்லை என அமைச்சர் நேரு தெரிவித்துளளார்.

'எதிர் கட்சியினரின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல முடியாது' - அமைச்சர் கே.என்.நேரு!
'எதிர் கட்சியினரின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல முடியாது' - அமைச்சர் கே.என்.நேரு!

By

Published : Jun 1, 2021, 7:07 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 ஆக்சிஜன் D வகை சிலிண்டர்கள்,7 ஆக்சிஜன் செறிவூட்டிகள், உணவு பொருள்களை மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தேவைகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டு மக்கள் திமுகவை அட்சியில் அமர வைத்துள்ளனர். எதிர் கட்சியினரின் விமர்சனங்களை தாண்டி தான்மக்களுக்குப் பணியாற்றி வருகிறோம். அவர்களின் விமர்சனத்திற்குப் பதில் தேவையில்லை, செயலில் காண்பிப்போம். நாங்கள் மக்களோடு இருப்போமே தவிர எதிர்க்கட்சியினருக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details