திருச்சி:திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகனின் நினைவுநாளையொட்டி திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக்கொண்ட அன்பழகன், திமுக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பலரும் அன்பழகன் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.