திருச்சி:பெரிய மிளகுபாறையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த ஜன.6ஆம் தேதி நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது பெண்கள் குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக வந்துள்ளனர்.
வீடியோ: வார்டு கவுன்சிலரை தலையில் தட்டிய அமைச்சர் கே.என்.நேரு - Political news
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி வார்டு கவுன்சிலரை தலையில் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கவுன்சிலரை தலையில் அடிக்கும் அமைச்சர் கே.என்.நேரு - அதிர்ச்சி வீடியோ!
அப்போது, அங்கு உட்கார்ந்து தண்ணீர் பிடித்து கொடுத்துக்கொண்டிருந்த திருச்சி மாநகராட்சியின் 54ஆவது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜை (திமுக), அமைச்சர் கே.என்.நேரு தலையில் செல்லமாக அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இதையும் படிங்க:'அமைச்சர் உதயநிதியிடம் பேசிவிட்டேன்' தென்காசி அரசு வேலையில் திமுகவினர் முறைகேடா? - வைரலாகும் வீடியோ