தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் வெற்றிடத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிரப்பிவிட்டனர்: அமைச்சர் கடம்பூர் ராஜு - rajini political statement

திருச்சி: தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நிரப்பிவிட்டனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

kadambur raju

By

Published : Nov 8, 2019, 11:42 PM IST

Updated : Nov 9, 2019, 6:59 AM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படவுள்ள இடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, டிஆர்ஓ சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைந்த தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் மணிமண்டபங்கள் அமைத்து பெருமை சேர்த்துவருகிறார். தமிழ்நாட்டில் 69 மணிமண்டபங்கள், ஐந்து அரங்கங்கள், நான்கு நினைவுச் சின்னங்கள், ஒரு நினைவுத் தூண் ஆகியவை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.

கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

சென்னை காந்தி மண்டபத்தில்தான் பல தலைவர்களின் மணிமண்டபங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் ஒரே இடத்தில் மூன்று மணிமண்டபங்கள் அமைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் ஆளுமையை யாராலும் ஈடுகட்ட முடியாது. அவரது அரசியல் வாரிசுகளாக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இரு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. ரஜினி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து" என்றார்.

இதையும் படிங்க: ’காவி’ நிறத்திற்கு புதிய விளக்கம் அளிக்கும் வானதி சீனிவாசன்!

Last Updated : Nov 9, 2019, 6:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details