தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்கூலுக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது, மீறி கொண்டுவந்தால் பறிமுதல் தான்' - அதிரடி காட்டிய அன்பில் மகேஷ் - Minister Anil Mahesh warns confiscated students if they use cell phones in classroom

'மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர். எனவே 11,12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளி திறந்து 5 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படமாட்டாது. மாணவர்கள் வகுப்பறைகளுக்குக் செல்போனை கொண்டு வரக்கூடாது. மீறிக் கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Anbil Mahesh says Students are in mental stress so Classes will not be conducted in schools  பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் திருச்சியில் பேட்டி
பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் திருச்சியில் பேட்டி

By

Published : Jun 14, 2022, 3:21 PM IST

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் மாற்றுச்சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக்கூடாது. தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது உண்மை தான். செல்போனை மாணவர்கள் வகுப்பறைகளுக்குக் கொண்டு வரக்கூடாது. மீறிக் கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது” எனத்தெரிவித்தார்.

மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர்...- அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு

'9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர் ':மேலும் அவர், 'அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. எனவே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர். எனவே 11,12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளி திறந்து 5 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது.

மேலும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் மூலம் மாணவர்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரம் உளவியல் பயிற்சிகள் வழங்கப்படும். 90 விழுக்காடு மாணவர்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 10 விழுக்காடு மாணவர்கள் சுகாதாரத்துறை மூலமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: ரீடிங் மாரத்தான் ' - தமிழக மாணவர்கள் உலக சாதனை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details