தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாக்கு கேட்க வேண்டியது எங்களது கடமை, எங்கள் கட்சி சின்னத்தில் வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை' - நீட் தேர்வு கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அதிமுக புறக்கணித்தது - அமைச்சர் அன்பில் மகேஷ்

'வாக்கு கேட்க வேண்டியது எங்களது கடமை. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல பிப்ரவரி 19 ஆம் தேதி எங்கள் கட்சி சின்னத்தில் வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. திருச்சி கோட்டையில் பறக்கின்ற திமுக சார்ந்த இரு வண்ண கொடி தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்குக் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அதிமுக புறக்கணித்தது - அமைச்சர் அன்பில் மகேஷ்
நீட் தேர்வு கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அதிமுக புறக்கணித்தது - அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Feb 7, 2022, 7:22 PM IST

திருச்சி:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட், மலைக்கோட்டை, பொன்மலை, ஏர்போர்ட் ஆகிய வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (பிப்.6) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "வாக்கு கேட்க வேண்டியது எங்களது கடமை. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல பிப்ரவரி 19ஆம் தேதி எங்கள் கட்சி சின்னத்தில் வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத்தொகுதியிலும் திமுக வேட்பாளர்களைப் பெற்றிருக்கிறோம். திருச்சி கோட்டையில் பறக்கின்ற திமுக சார்ந்த இரு வண்ணக் கொடி தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்குக் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியைத் திட்டியோ, குறை கூற வேண்டிய அவசியமோ இல்லை.

நீட் தேர்வால் ஏராளமான பள்ளி மாணவர்களை இழந்திருக்கிறோம்.

நீட் தேர்வு தொடர்பாகக் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அதிமுக புறக்கணித்தது.

இப்படிப்பட்ட எதிர்க்கட்சிக்கு மீண்டும் பாடம் புகட்டும் வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதுபோல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 100 விழுக்காடு வெற்றி பெற வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக அமோக வெற்றிபெற காமாட்சி அம்மனிடம் வேண்டிக்கொண்ட ஓபிஎஸ்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details