திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மினி லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலி - காவல் துறை விசாரணை! - mini van accident
திருச்சி: மணப்பாறை அருகே சென்னையிலிருந்து பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு தேனி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் ஆறு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
six cow dead
இதில், சென்னையில் இருந்து எருமை மற்றும் பசு மாடுகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஆறு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.