திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஸ்ரீ வேப்பிலை சாயிபாபா கோயில் குழுவினர் மற்றும் ஸ்ரீ ரெங்கா சாயி டிரஸ்ட் ஆகியோர் சார்பில் எம்.ஜி.ஆர் 102ஆவது பிறந்தநாள் மற்றும் ஜெயலலைதா 71ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் சித்ரா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் சிவசுப்பிரமணியன், ஷர்மு ஆகியோர் மாட்டிற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழாவை தொடங்கி வைத்தனர்.
மணப்பாறையில் மஞ்சு விரட்டு விழா - manaparai
திருச்சி: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா மணப்பாறையில் நடத்தப்பட்டது.
மஞ்சு விரட்டு விழா
மதுரை, சிவகங்கை களத்தில் இறங்கிய 13 மாடுகளை 117 வீரர்களில், மாடு ஒன்றிற்கு 9 வீரர்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கினர். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் வீரர்களை கலங்கடித்து விளையாடியது. இதில் வீரர்களின் கைகளில் சிக்காமல் வெற்றி பெற்ற காளைக்கும், களங்கடித்த காளைமாடுகளை அடக்கிய வீரர்களின் அணிக்கும் ரூ.7000 ரொக்க பரிசாக அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் விழாவினை காண குவிந்துள்ளனர்.