தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டுச் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவு: ரூ.3 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு - Trichy district latest news

திருச்சி: மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் அதிகம் வராததால் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாட்டுச்சந்தை

By

Published : Oct 23, 2019, 7:19 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மாட்டுச்சந்தை பிரசித்திப் பெற்றதாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை பிற்பகல்வரை நடைபெறும் இந்தச் சந்தையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

இதனால் இந்தச் சந்தையில் வாரந்தோறும் மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். மேலும் வாரந்தோறும் இரண்டாயிரத்து 500 மாடுகள் கொண்டுவரப்படும் நிலையில், தற்போது 200 மாடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இந்த மாடுகளும் வியாபாரிகள் வராததால், திரும்பி கொண்டுச் செல்லப்பட்டன.

merchants

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாடுகளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டுவந்த ஆடு, மாடுகள் விற்பனையாகாமல் திரும்ப கொண்டுசெல்வதால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது" என வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இன்று ஒருநாள் மட்டும் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: புஞ்சைப் புளியம்பட்டி சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details