தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொகுதி நலனுக்காக முதலமைச்சரை சந்திப்பேன் - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி - meet the Chief Minister speak Thirunavukkarasar MP

திருச்சி: ரயில்வே மேம்பாலம், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரை விரைவில் சந்திப்பேன் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

By

Published : Jan 28, 2020, 4:56 PM IST

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசின் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் எம்.பி. ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் பங்கேற்கவில்லை. இது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசக்கூடிய கூட்டமாகும். இது முதல் கூட்டம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்தக் கூட்டம் நடைபெறும். ஏற்கனவே நடந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஆய்வுக் கூட்டத்தில் நிறை, குறைகள் குறித்து பேசப்படும்" என்றார்.

தொடர்ந்து, திருச்சியில் நடந்த கொலை சம்பவத்தை பாஜக மத மோதலாக சித்திரிக்கும் செயல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

அதற்கு அவர், "கொலை எந்தக் காரணத்தால் நடந்தாலும் கொலை கொலைதான். காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கொலையையும் நியாயப்படுத்த முடியாது. அதனால் காரண காரியங்களை ஆய்வுசெய்யாமல் இதுபோன்ற கொலை கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மேம்பாலம், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரை விரைவில் சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டில் பல பிரச்னைகள் இருக்கு, ரஜினி பிரச்னையைப் பத்தி மேலும் பேசாதீங்க' - கடுப்பான திருநாவுக்கரசர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details