தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்கிய எம்.பி. திருநாவுக்கரசர் - Food for transgender people

திருச்சி: எம்.பி. திருநாவுக்கரசர் சார்பில் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

உணவு பொருள்களை பெற்று கொண்ட திருநங்கைகள்
உணவு பொருள்களை பெற்று கொண்ட திருநங்கைகள்

By

Published : Apr 18, 2020, 12:44 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர்.

இதனால் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், வறுமையில் வாடுபவர்களுக்கு இலவசமாக அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கிவருகின்றனர். அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சார்பில், திருநங்கைகளுக்கு இலவசமாக அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருநாவுக்கரசர் சார்பில் திருநங்கைகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்கல்


திருச்சி மாநகராட்சி ராமசந்திரபுரம் 55, 60ஆவது வார்டுகளில் உள்ள 50 திருநங்கைகள் உள்பட 200 ஏழை குடும்பங்களுக்கு, திருநாவுக்கரசர் சார்பில் அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், கோட்டத்தலைவர் ராஜ்மோகன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன், காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஏரியில் கலந்த கிருமி நாசினி, டன் கணக்கில் மீன்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details