மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலின்டோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளை, வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த அஜ்மல் கான் என்பவர், வெள்ளை நிற வெளிநாட்டு கைக்கடிகாரங்களில் குரோம் பூசிய தங்கத் தகடுகளை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.
மலேசியாவில் இருந்து கடத்த முயன்ற ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - திருச்சி விமான நிலையம்
திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த மலின்டோ விமானத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 690 கிராம் எடைகொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 லட்சம் மதிப்புள்ள தங்கம்
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.23.80 லட்சம் என்றும், மொத்தம் 690 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated : Jul 18, 2019, 12:23 PM IST