திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குள்பட்டது விடத்திலாம்பட்டி, வெள்ளக்கல். இங்கு, ஒன்றாவது வார்டு பகுதிக்கு மணப்பாறை நகராட்சி நிர்வாகம் முறையாக அடிப்படை வசதி செய்து தராததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாறும் அலுவலர்கள்... மாறாத அடிப்படை வசதிகள்: மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - திருச்சி செய்திகள்
திருச்சி: மூன்று ஆண்டுகளாக அலுவலர்கள் மாறினாலும் அடிப்படை வசதிகள் மாறவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மலைப்பகுதியான காந்தி சாலையில் குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறுகளில் மின் மோட்டார் அமைத்து தருவது, உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து காவேரி குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: கொரோனா பீதி: சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்க தடை!