திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக் குண்டம் இறங்குதல் எனப்படும் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறும்.
100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற தீமிதி திருவிழா - Temple Festival
திருச்சி: மணப்பாறை அடுத்த மருங்காபுரிப் பகுதியில் உள்ள பழமையான ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற தீமிதி திருவிழா
இதேபோல் இவ்வருட திருவிழாவின் பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் மருங்காபுரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் என சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பூ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். இதனையடுத்து இன்று மாலை பகவதி அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.