திருச்சி:மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட சுதா பாஸ்கரன் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 11 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அதிமுக 15 வாக்குகளைப் பெற்று 56 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து நகர் மன்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மற்றும் நகராட்சி கூட்டத்தை எதிர்க்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
நகர்மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக பெண் கவுன்சிலர் இந்நிலையில் நேற்று திடீரென நகராட்சி அலுவலகம் வந்த 18-வது வார்டு உறுப்பினரும் நகர்மன்ற தலைவருமான சுதா பாஸ்கரன் தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி ஆணையரிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கடிதத்தை ஆணையர் எஸ்.என் சியாமளா ஏற்றுக்கொண்டார். நகர்மன்றத் தலைவரின் திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு - வழக்கறிஞர் திருமாறன்