திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சேதுரத்தினபுரத்தில் வசித்து வருபவர் ரகமத்துல்லா. இவர் முத்தன் தெருவில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கால் முறிவினையும் பொருட்படுத்தாது ஆம்புலன்சில் வந்த வாக்காளர்...! - Election
திருச்சி: கால் முறிவினையும் பொருட்படுத்தாது ஆம்புலன்சில் வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர் மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் தனது உடல் நலக்குறைவினையும் பொருட்படுத்தாத ரகமத்துல்லா தனது வாக்குரிமையைச் செலுத்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் சாலையில் உள்ள சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு (வாக்குச்சாவடி எண் 112) வந்தார்.
அங்கு ஸ்ட்ரெச்சர் மூலம் வாக்குச்சாவடியின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ரகமத்துல்லா தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார். உடல்நிலை குன்றிய நிலையிலும் தனது ஜனநாயக கடமையாற்ற ஆம்புலன்சு மூலம் வாக்குச்சாவடிக்கு வந்த ரகமத்துல்லா அங்கிருந்த மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.