திருச்சி: மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம். இந்த கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு வழிபாடு 1ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து ஆலயத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.