sexually harassing minor girl: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, நேற்று முன்தினம் (டிச. 27) தனது வீட்டின் அருகே கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தார். அப்போது சண்முக சுந்தரம் (22) என்பவர் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து இளைஞரின் அத்துமீறல் குறித்து நேற்று (டிச. 28) சிறுமி தனது அம்மாவிடம் தெரிவித்தார். சிறுமியின் அம்மா மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.